குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்து மக்கள் தலைவர்கள் மௌனவிரதம் கலையுங்கள்!

ஆட்சிக்கு வருவதற்கு குடியுரிமை விவகாரத்தை துருப்புச்சீட்டாக பயன்படுத்தும் போக்காகவே இருந்து வருவது நாட்டின் அரசியல் வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது.

தேர்தல் வந்தால் போதும் நாடு முழுவதும் எங்கு மேடை போட்டாலும் குடியுரிமை விவகாரம் தான் பேசப் பட்டது.

ஆனால் இன்று நாட்டில் இப்படி ஒரு பிரச்சினையே இல்லாது போல் அமைதியாக இருப்பது குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நாட்டின் பிரஜை நான் எனக்கு குடியுரிமை வழங்குங்கள் என்ற அழுக்குறல் நாடுமுழுவதும் கேட்பது தேர்தலுக்கு பின் நமது தலைவர்களுக்கு கேட்காமல் போய்விட்டது போலும்.

நாட்டில் சிவப்பு அடையாள அட்டை கொண்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே பெரும் போறாக இருக்கும் வேளையில் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடைக்காது என்ற சட்டத்திருத்தம் கொண்டுவந்தது வேதனைக்குறிய ஒன்றாகும் என்று டிரா மலேசியா தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார்.

முந்தைய காலங்களில் இங்கு பிறந்திருந்தாலும் பிறப்பு பதிவில் முறையான ஆவணங்கள் இல்லாதது, தகவல்கள் இல்லாதது போன்ற காரணங்களினால் சிவப்பு அடையாள அட்டைகள் கிடைக்கப் பட்டது. அவர்களின் இந்த குறையை தீர்க்கும் நடவடிக்கைகள் இன்றும் முடிவு இல்லை.

அவர்களின் பிள்ளைகளாக இந்நாட்டில் பிறந்து வளரும் சிறார்கள் பலரும் குடியுரிமை இல்லாமல் அத்தியாவசிய உரிமைகளும் சலுகைகளும் கிடைக்காமலே இருக்கின்றனர். குடியுரிமை இல்லாத காரணத்தினாலே அரசாங்க சலுகைகளில் ஒன்றான கல்வி, அதை பெருவதே அவர்களுக்கு எட்டாக்கணியாகவே இருக்கிறது.

இந்த பிரச்சினைகள் குறித்து இதுவரயிலும் நாடலுமன்றத்தில் கேள்வி எழுப்பாமல் அமைதிகாக்கும் தலைவர்கள், தங்களின் மௌனவிரதத்தை கலைத்து நல்லதொரு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சரவணன் கேட்டுக் கொண்டார்.

தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி தவிக்கின்ற அந்த பெற்றோகளுக்கும் எதிர்காலம் என்றால் என்ன என்பதை அறியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் நம் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும்.

நாட்டில் எடுக்கப்படும் அல்லது திருத்தப்படும் சட்டதிட்டங்கள் மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லதை கொண்டு வரவேண்டுமெ தவிர, ஒரு சார்பு மக்களை பின்படுத்துவதோ அல்லது கை விடப்படும் வகையில் அமையக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இன்று காலை நலைநகரில் உள்ள சைனீஸ் அஸெம்பிலி மண்டப்பத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திட்டத்தை எதிர்த்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடை பெற்றது.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் டிரா மலேசியா இயக்கம் உட்பட Family Frontiers, Lawyers of Liberty, Yayasan Chow Kit, Non-Discrimination and Access to Knowledge (ANAK), MUDA ஆகிய இயக்கங்களும் மற்றும் பிள்ளையின் குடியுரிமைக்காக காத்திருக்கும் பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles