மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையில் பேராக் ஈப்போவில்சொக்சோவின் தீபாவளி கொண்டாட்டம்!

வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று ஈப்போ இம்பியானா தங்கும் விடுதியில் தீபாவளி பொது உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உச்சரிப்பில் சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்தியர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நடனங்கள் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

தீபாவளி பண்டிகையை அனைத்து மலேசியர்களும் இணைந்து கொண்டாடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.

மலேசியாவில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் தங்களது பெருநாளை கொண்டாடி மற்றவர்களை உபசரிப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

அந்த வகையில் இன்று சொக்சோ நிறுவனத்தின் தீபாவளி பொது உபசரிப்பில் 9 தொண்டு நிறுவனங்களுக்கு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles