
மாலிம் நாவார் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் வி.பவானி ஷாஷா ஏற்பாட்டில் தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
கம்பார் தமிழர் மேம்பாட்டு இயக்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மூவின மக்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்ற இவ்விழாவில் மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்காக முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தீபாவளி நிகழ்ச்சி என்றாலும் மூவினத்தவர்களும் வந்து கலந்து கொண்டது மலேசியர்களிடையிலான ஒற்றுமையை புலப்படுத்துவதாக பவானி ஷாஷா கூறினார்.
மேலும், இவ்விழாவில் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் செமின், கெரான்ச்சி சட்டமன்ற உறுப்பினர் எஞ்சலின் கூ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

