எனக்கு எதிராக களங்கம் விளைவித்தாலும்ஆர்ப்பாட்டம் இன்றிஅமைதியான முறையில் சாதிக்க விரும்புகிறேன்!அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் சாதிக்க விரும்புகிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று தெரிவித்தார்.

நான் எப்போதும் அமைதியாக இருந்து சரியான முறையில் சேவையாற்றவே விரும்புகிறேன்

அமைச்சர் என்ற முறையில் இந்திய சமுதாயத்திற்கு முடிந்த அளவு சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டது முதல் இதுவரை ஒருநாள் கூட ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை.

யார் காலையும் பிடித்து அமைச்சர் பதவியை வாங்கவில்லை.

ஆனால் நான் அமைச்சர் பதவி ஏற்றது முதல் இதுநாள் வரை தனிப்பட்ட தாக்குதல்கள்.

நான் ஒழுங்காக வேலை செய்யக்கூடாது என்பதற்காக எனக்கு எதிராக பத்திரிகையில் அதிக செய்திகளை வெளியிட்டு களங்கம் கற்பிக்க பார்த்தார்கள்.

இதை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். இருப்பினும் நான் அமைதியான முறையில் பல கஷ்டங்களை தாங்கி சவால்களை எதிர்கொண்டேன்.

என் கை சுத்தம் என்பதால் அனைத்தும் தாண்டி வந்தேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று அறிவித்தார்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு எச்ஆர்டி கோர்ப் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளருடன் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles