
புத்ரா ஜெயா, நவ. 14-
நாட்டில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்க தலைவர்களயும் பெரிதும் பாராட்டுகிறேன்.
இதன் வழி தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என இன்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் தேசிய அளவிலான தொழிற்சங்களின் பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வாண்டுக்குள் பத்து லட்சம் உறுப்பினர்களின் இலக்கை எட்டும் தொழிற்சங்களின் முயற்சியை பாராட்டுகிறேன். இதுபெருமைக்குரிய சாதனையாகும்.
12ஆவது மலேசியா திட்டத்திலும் தொழிற்சங்கங்களுடன்
அரசாங்கம் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் .
தொழிற்சங்கம் (திருத்தம்) 2023 சட்ட மசோதா ஏற்கெனவே அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா Dewan Negaraவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தொழிற்சங்கம் (திருத்தம்) 2023 சட்ட மசோதா தொழிற்சங்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும் ஒரு திருத்தமாகும்.
தொழிலாளர்கள் அவர்களின் விருப்பப்படியே தொழிற்சங்கங்களை நிறுவி அதில் சேருவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, இந்த தேசிய தொழிற்சங்கப் பேரவை மாநாட்டில் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் முன்னாள் தலைமைச் செயலாளர் மறைந்த ஜி. இராஜசேகரனுக்கு மனிதவள அமைச்சின் சிறந்த விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது
மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸில் நீண்டகாலமாக தலைமைச் செயலாளராக இருந்து சேவையாற்றியிருக்கும் அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
மறைந்த இராஜசேகரன் சார்பில் இந்த விருதை அவரின் துணைவியார் Mimi Ang Shaw Lum பெற்றுக் கொண்டார்.
மேலும் இந்த விழாவில் எட்டு விருதுகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

