
புத்ரா ஜெயா, நவ 17-
ஊதிய மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை குறிப்பாக குறைந்தபட்ச ஊதிய ஆணையை அமல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எப்போதும் தீவிரமாக உள்ளது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மறு மதிப்பீடு செய்தல்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூழ்நிலை மற்றும் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அவ்வப்போது செயல்படுத்தப் படுகிறது என்று அவர் சொன்னார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம் நடைமுறைக்கு வந்தது.
இருப்பினும் குறைந்த பட்ச அடிப்படை சம்பளத்தை வழங்க தவறிய முதலாளிகளுக்கு எதிராக மனித வள துறை 1,280 விசாரணை அறிக்கைகளை திறந்திருப்பதாக அவர் சொன்னார்.

