
பேராசிரியர் ராமசாமிக்கு சந்திர சேகரன் கோரிக்கை.
கடந்த 2009ஆம்
ஆண்டு நடைப்பெற்ற
ஹிண்ட்ராஃப் (Hindraf)
பேரணிக்குப் பிறகு இந்திய சமுதாயத்தை ஒன்றிணைத்த பெருமை திரு ராமசாமியை சேரும் என ஜொகூர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரியான வழிகாட்டுதலும்,முறையான தலைமைதுவமும் இல்லாததாலும் பிளவு பட்டு இருந்த இந்திய சமுதாயத்தை மீண்டும் ஒன்றிணைத்தப் பேராசிரியர் திரு பி.ராமசாமி அதனை இந்த சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் பிளவு பட்டு இருக்கும் இந்திய சமுதாயம் திரு பி.ராமசாமிக்கு விதிக்கப்பட்ட மன நஷ்ட வழக்கில் திரட்டப்பட்ட நிதியின் மூலம் தங்களின் சமுதாய கடப்பாட்டை நிரூபித்துள்ளதோடு,இந்திய சமுதாயத்தின் ஒற்றுமையை புலப்படுத்தியுள்ளனர்.
அதற்கு காரணமாக இருந்த திரு பி.ராமசாமியை இவ்வேளையில் தாம் பாராட்ட கடமை பட்டுள்ளதாக குறிப்பிட்ட திரு சந்திர சேகரன்,
அவர் மேலும் குறிப்பிடுகையில் திரு பி.ராமசாமி தனது நன்றி கடனாக இந்த சமுதாயத்திற்கு நல்ல தொரு தலைமைத்துவ ஆற்றலை உருவாக்க வேண்டும் எனவும்,சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கும் இளைய தலைமுறைக்கு முதிர்ச்சி பெற்ற கல்வியாளருமான திரு ராமசாமி பழனிசாமி நல்லதொரு வழியை உருவாக்கி தர வேண்டும் என சமூக போராட்டவாதியுமான,சமூக சிந்தனையாளரும் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தனது அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டார்.

