வீட்டு பணிப்பெண் பெர்மிட்டைபுதுப்பிக்க முதலாளிகள் RM610 செலுத்த வேண்டும்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா, நவ 18-
குடிவரவுத் துறை நிர்ணயித்தபடி, இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் பெர்மிட் (PDA) அனுமதியைப் புதுப்பிப்பதற்கான செலவாக, முதலாளிகள் RM610 செலுத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

இதில் 410 ரிங்கிட் வரி செலுத்தும் செலவை உள்ளடக்கியது. தற்காலிக பணிக்கான வருகை பாஸ் (PLKS) RM60. செயலாக்கம் RM125 மற்றும் விசா RM15 ஆகும்.

ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் RM200 செய்யப்படும் PDA (Fomema) சுகாதாரப் பரிசோதனைக்கான செலவை இந்த செலவில் சேர்க்கவில்லை என்று அவர் கூறினார்.

காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான கட்டணமும் உள்ளது,
.
இது அந்தந்த சொந்த நாட்டின் தூதரகத்தால் தீர்மானிக்கப்படுகிறது ” என்று நேற்று ஒரு அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பணியமர்த்தப்படும் பணிப்பெண் அனுமதிப் பத்திரத்தை முதலாளிகள் புதுப்பிக்க வேண்டும்.

அனுமதி காலாவதியாகும் மூன்று மாதங்களுக்கு முன்பே அதைச் செய்ய வேண்டும்.

அனுமதி புதுப்பித்தல் விண்ணப்பத்தை முதலாளியால் செய்யலாம் அல்லது தீபகற்ப மலேசியா மனிதவளத் துறையில் (JTKSM) பதிவுசெய்யப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகமையை (APS) நியமிப்பதன் மூலம் APS பட்டியலை JTKSM இணையதளத்தில் சரிபார்க்கலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles