
கிலானா ஜெயா, யூனிதார் பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில் ரவாங், சுங்கை சோ, தாமான் புக்கிட் தெராதாயைச் சேர்ந்த சசிலா தேவி செல்வகுமார் சிறார் தொடக்கக்கட்ட கல்வித் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இப்பட்டத்தைப் பெற்ற தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த விரிவுரையாளர்கள், பெற்றோர், குடும்பத்தினர் அனைவருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சசிலா தேவி குறிப்பிட்டார்.

