9,000 பேர் கலந்து கொண்ட சொக்சோ ஓட்டப்பந்தய போட்டியை அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்!

புத்ரா ஜெயா, நவ 19-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புத்ரா ஜெயா டத்தாரானில் மிகப்பெரிய அளவில் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிளோட்டப் போட்டி நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற இந்த போட்டியை மனித வள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மலேசியர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் இந்த போட்டியை சொக்சோ மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்ததை அமைச்சர் சிவகுமார் வெகுவாக பாராட்டினர

தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து பிள்ளைகளும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இன்று சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓட்டப்பந்தய மற்றும் சைக்கிளோட்டப் போட்டியால் 9,000 பேர் திரண்டதால் புத்ரா ஜெயா டத்தாரான் விழாக்கோலம் பூண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles