
பத்துமலை திருத்தளத்தில் ஶ்ரீ மகா துர்க்கை அம்மனுக்கு பிரதான அலையம் அமைக்கப்பட்டு இன்று விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிரத்தியேகமாக மகா யாகம் நடைபெற்று காலை 9.30 மணியளவில் ஆலயத்தின் கோப்ரத்தின் கலசத்தில் குடமுழக்கு நீர் ஊற்றபட்டது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முயற்சியில் உலகை காக்கும் ஶ்ரீ மகா துர்க்கை அம்மனுக்கு எழுப்பியிருக்க்கும் இந்த ஆலயத்தில் 40 அடி நீளத்தில் தலையில் கைவைத்து சாய்து படுத்திருக்கும் வடிவில் பக்கத்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்கை அம்மன் திருவுருவத்தை வடிவமைத்திருப்பது முக்கிய சிறப்பு அம்சமாகும்.
ஶ்ரீ மகா மாரியம்மான் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் விமரிசையாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ம.இ.கா. தேசிய துணை தலைவர் டத்தோ எம்.சரவணன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு உட்பட மேலும் பல முக்கிய பிரமுகர்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

