

பட்டர்வொர்த், நவ. 21-
பினாங்கு பத்துகவான் தொழில் துறை பூங்காவில் இயங்கிக் கொண்டிருக்கும் DEXCOM (மலேசியா) மருத்துவ நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று சிறப்பு வருகை புரிந்தார்.
டெக்ஸ்காம் என்பது ஒரு மருந்து நிறுவனமாகும். இது மலேசிய பட்டதாரி வேலை வாய்ப்பு முயற்சி உட்பட TalentCorp இன் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குறியது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
வரும் மூன்று ஆண்டுகளில் TalentCorp நிறுவனத்துடன் இணைந்து டெக்ஸ்காம் 3,500 வல்லுநர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தருணத்தில் TalentCorp தலைமை செயல்முறை அதிகாரி தோமஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்திறேன் என்றார் அவர்.

