வெளிநாட்டு தொழிலாளர்களின் நிர்வாக முறை சிறந்த முறையில் இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்!

ஷா ஆலம், நவ 23-
சில பிரச்சினைகள் தோன்றினாலும் இந்நாட்டில் வெளிநாட்டு ஊழியர்களின் நிர்வாகம் தொடர்ந்து சிறந்த முறையில் நடைபெறுவதை மனிதவள அமைச்சு (KSM) உறுதி செய்யும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மை அமைப்பு (ePPAx) மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (FWCMS) உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களின் மேலாண்மை மிகவும் திறமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய பல முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

வேலை வாய்ப்பு இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் முதலாளிகள் அல்லது முகவர்களால் ஏற்படும் ஏதேனும் தவறுகளை KSM கண்டறிந்தால், உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மனிதவளத் துறைக்கு (JTK) அறிவுறுத்தியுள்ளேன் என்று பிரதமர் தங்க கை விருது விழாவில் (Majlis Anugerah Tangan Emas Perdana Menteri ) கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles