
ஷா ஆலம் நவ 24-
WorldSkills Malaysia Youth (WSMB) மற்றும் WorldSkills Malaysia Teacher (WSMP) போட்டிகளில் சிறந்த ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக தங்க கை விருது விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு இளைஞர்களிடையே அதிகரித்த பங்கேற்பு தொழில் திறன் துறையில் வெற்றியைத் தொடர அவர்களின் அதிக ஆர்வம் மற்றும் போராடும் மனப்பான்மை காட்டுகிறது” என்றார் அவர்.
WSMB, WSMP மற்றும் JuniorSkills Malaysia (JSM) முன் தகுதி நிலைகளை உள்ளடக்கிய தேசிய அளவிலான திறன் போட்டி மே 9 முதல் ஜூன் 12 வரை மொத்தம் 1,467 பேர் பங்கேற்றனர்.
ஏழு பிரிவுகளில் இறுதி கட்டப் போட்டிக்கு 1,467 பேர் தகுதி பெற்றனர் என்று அவர் சொன்னார்.
நேற்று ஷா ஆலம் மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்ற தங்க கை விருது வழங்கும் விழாவுக்கு தலைமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2023ஆம் ஆண்டுக்கான பிரதமரின் கோல்டன் ஹேண்ட் விருதை (Anugerah Tangan Emas Perdana Menteri 2023) முஹம்மது ஹக்கிமி அபு பக்கர் மற்றும் முகமட் ஃபைரூஸ் ஹம்ட்சா (Muhammad Hakimi Abu Bakar dan Mohd Fairuz Hamdzah) மற்றும் Tokoh Mahir விருதை டத்தோ ஷம்சுதீன் அம்ரானுக்கு (Datuk Shamsuddin Amran) வழங்கினார்.
பொதுவாக தொழிலாளர் தின கொண்டாட்ட விழாவில் வழங்கப்படும் Tokoh Mahir விருது, தொழில் திறன் பயிற்சியின் வளர்ச்சியில் சிறந்த சாதனைகளை திரட்டி பங்களித்தவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

