தீபாவளி பற்றுச்சீட்டு திட்டம் – குவியும் பாராட்டுகள்

இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்த 200 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டு திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு மேற்கொண்ட முயற்சியின் பலனாக
மாநிலம் முழுவதும் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மக்களுக்கு இந்த 200 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆண்டு தீபாவளிக்கென்றே சுமார் 22 000 பற்றுச்சீட்டுகளுக்கு 44 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதன் பொறுப்பாளர்கள் மூலம் அடிதட்டு மக்களை அடையாளம் கண்டு பற்றுச்சீட்டுகள் கொண்டுச் சேர்க்கப்பட்டன.

இத்திட்டத்தை பலர் குறை கூறியிருந்தாலும் பல இந்தியர்களின் வீடுகளில் தீபாவளியை கொண்டாட இத்திட்டம் பெரியளவில் உதவியாக இருந்துள்ளது.

200 வெள்ளியில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் பலகார பொருட்களையும் மக்கள் வாங்கிக் கொண்டனர்.

வசதி குறைந்தவர்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டம் தங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது என பற்றுசீட்டினை பெற்றுக் கொண்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, அடுத்தாண்டு இன்னும் சிறப்பான முறையில் இந்த பற்றுச் சீட்டு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என மக்கள் தங்களின் எதிர்பார்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமைத்துவத்தின் கீழ் இந்திய சமுதாயத்திற்கென பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆலயம், கல்வி, பொருளாதார மேம்பாடு போன்ற திட்டங்கள் மட்டுமல்லாமல் மருத்துவ உதவிகள், கடனுதவி, சிறுவணிகர்களுக்கான சிறப்பு சலுகைகள் உட்பட இன்னும் பல நலத் திட்டங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

சிறு தொழில் செய்யும் இந்தியர்களுக்காக ஐ-சீட் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் அவர் தனி நிதியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles