
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தளங்களின் சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 50 மில்லியன் போதுமானது அல்ல.
ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த 50மில்லியன் நிதி சபா, சரவாக் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் இருக்கின்ற முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தளங்களின் எண்ணிக்கைகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுவனேஸ்வரன் கோடிக்காட்டியுள்ளார்.
நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தளங்களுக்கு ஏற்றவாறு சீரமைப்புக்கு 100 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு பரிசீலனை செய்ய வேண்டும் என்று யுவனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் உள்ள கழிப்பறைகளின் சீரமைப்புக்கு 100மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத்தளங்களின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டை மீண்டும் ஆராய்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மக்களுக்கான பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற வேளையில் இந்த விவகாரத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

