அதிகமான இந்திய இளைஞர்களை வியாபாரத்தில் ஊக்குவிக்க கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்திற்கு அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளி மானியம்!

கோலாலம்பூர் நவ 25-
அதிகமான இந்திய இளைஞர்களை வியாபாரத்தில் ஊக்குவிப்பதற்காக கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்திற்கு மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் 50,000 வெள்ளியை வழங்க முன் வந்துள்ளார்.

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் அதிக வர்த்தக நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

வியாபார துறையில் பங்கேற்க நிறைய புதிய வாய்ப்புகள் இருப்பதால் இந்திய இளைஞர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்திய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் விளங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நேற்று கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தீபாவளி விருந்து உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் இராகவன் 95 வருடமாக சங்கம் தனது உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து இந்திய வர்த்தகர்களின் நலன் கருதி செயல்பட்டு வருவதாக
சொன்னார்.

தவிர்க்க முடியாத காரணத்தால் மனிதவள அமைச்சர் சிவகுமார் இந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை.

இருப்பினும் சங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அதன் வளர்ச்சி திட்டங்களுக்கு உதவுவதற்காக 50,000 மானியம் வழங்குவதாக அமைச்சர் சிவகுமார் கூறி இருப்பது பாராட்டுக்குரியது என்று நிவாஸ் இராகவன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles