
புத்ரா ஜெயா,நவ 26-
ஹாங்காங் ஸ்குவாஷ் போட்டியில் மலேசிய இளம் வீராங்கனை சிவசங்கரி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் Tunku Mukhriz ஸ்குவாஷ் போட்டியிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியிலும் சிவசங்கரி இரண்டு தங்கத்தை வென்று சாதனை படைத்தார்.
பல அனைத்துலக போட்டிகளில் சிவசங்கரியின் சாதனைகள் வியக்க வைக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இனிவரும் போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்று சிவசங்கரி நாட்டுக்கு பெருமையை சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

