
சிப்பாங் , நவ 26-
மொனாக்கோ நாட்டின் தலைவர் இளவரசர் Putera Albert Il , நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டு இன்று காலையில் மலேசிய வந்தடைந்தார்.
இன்று காலையில் சிப்பாங் KLIA அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த இளவரசர் ஆல்பர்ட்டை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வரவேற்று மகிழ்ந்தார்.
மொனாக்கோவின் தூதுக் குழுவினருடன் மொனாக்கோவின் வெளியுறவு அமைச்சர் இசபெல் பெரோ-அமேடே,
மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் குழுவினரும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இளவரசர் ஆல்பர்ட் Il இன் வருகை, மலேசியா மற்றும் மொனாக்கோ இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

