
வெள்ளப் பிரச்சினையை எதிர்நோக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நிரந்தர நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதன் முன்னோடி திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மாநிலங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்படும்.
ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பேரிடருக்கு தற்காலிக நிவாரண மையங்கள் போதுமானதாக இருக்காது. எனவே சகல வசதிகளை கொண்ட நிவாரண மையங்களை அமைக்க அரசு திட்டம் கொண்டுள்ளது.
ஒரு நிவாரண மையம் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படும் என இன்று நாடாளுமன்றத்தில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

