
தமிழ் வாழ்த்து பாடல் மற்றும் திருவள்ளுவர் படம் பொறிக்கப்பட்ட பதாகைகளுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் மன்னிப்பு கோரியிருப்பதை வரவேற்பதாக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறினார்.
ஆனால், இப்பிரச்சினைக்கு மன்னிப்பு மட்டும் தீர்வாகாது. இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதை கல்வி அமைச்சு உட்பட அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.
இதன் தொடர்பில் கல்வி அமைச்சரிடம் தாம் பேசிய போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்திருந்ததை சுந்தராஜூ சுட்டிக் காட்டினார்.
இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று குரல் எழுப்பிய இந்திய தலைவர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது.
சில தரப்பினரின் பொறுப்பற்ற செயல்களால் அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
எனவே, இவ்விவகாரத்திற்கு தமது தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு திட்டங்களை கொண்டிருப்பதாக பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.

