சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பதிவு திறக்கப்பட்டுள்ளது!

அடுத்தாண்டு ஒன்றாம் வகுப்பில் இணையும் மழலைகளுக்காக தேசிய வகை சரஸ்வதி தமிழ்ப்பள்ளி பதிவு நடவடிக்கையை தற்போது திறந்துள்ளதாக அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பதன் அடிப்படையில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தமிழ் கலாச்சாரம் மற்றும் தரமான கல்வியின் சாரத்துடன் பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த தமிழ்ப்பள்ளி சிறந்த தேர்வாகும்.

சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி அறிவு புகுட்டுவதுடன் எதிர்கால தலைவர்களாகவும் அவர்களை உருவாக்குவோம்.

அதோடு, புறப்பாட நடவடிக்கைகிலும் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளது.

தங்கள் பள்ளியில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்க ஏதுவான சகல வசதிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, சரஸ்வதி தமிழ்ப்பள்ளியை தேர்வு செய விரும்பும் பெற்றோர்
03-61565751 என்ற எண்ணில் பள்ளி நிர்வாகத்தினரை அழைத்து பேசலாம் என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கேட்டு கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles