

கோலாலம்பூர் –
பிரிக்பீல்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் துன் சம்பந்தன் வணிகத் தளத்திற்கு இனி ஒரு சங்கம் தான்.
இச்சங்கத்தின் வாயிலாக இங்குள்ள வியாபாரிகளிம் நலன் காக்கப்படும் என்று பைன்ஸ் பசார் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம். சிவக்குமார் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் துன் சம்பந்தன் வணிகத் தளத்தில் அதிகமான இந்தியர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் இங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு என ஓர் சங்கம் இல்லை. சங்கம் வைத்திருப்பவருக்கு இங்கு வியாபாரம் செய்யவில்லை.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பைன்ஸ் பசார் வியாபாரிகள் சங்கம் அமைக்கப்பட்டது.
இச்சங்கத்தின் தேர்தலை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகாரிகள் முன்னின்று நடத்தி வைத்தனர்.
சங்கத்தின் தலைவராக 19 வாக்குகள் பெற்று நான் வெற்றி பெற்றேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டீவன் தோல்வி கண்டார்.
அதே வேளையில் துணைத் தலைவராக ரமேஷ், செயலாளராக நூருல் அய்ன், துணை செயலாளராக கிரேஸி, பொருளாளராக சோபியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதே வேளையில் பார்த்திபன், பிரபா, சந்திரன், சரஸ்வதி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி, செல்வி, முகமட் நூர் அஷான், சாவ் யோங் லியான் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
குறிப்பாக சங்கத்தின் ஆலோசகராக டத்தோஸ்ரீ சீனிவாசகம் செயல்படுகிறார்.
தற்போது இந்த வணிகப் பகுதிக்கு இங்கு வியாபாரம் செய்பவர்களை கொண்டு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இனி இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இருக்கும் பிரச்சினைக்கு நாங்களே குரல் கொடுத்து போராடிக் கொள்கிறேன்.
மேலும் இந்த வணிக பகுதியில் இந்தியர்களின் பாரம்பரியத்தை சார்ந்து அனைத்து உணவுகளும் இங்கு உள்ளன.
இது மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும். அதைவே வெளியில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இங்கு வர வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான சங்கம் முன்னெடுக்கும் என்று சிவக்குமார் கூறினார்.

