மலேசிய வணிகர்கள் சம்மேளனத்தின் தீபாவளி உபசரிப்பில் இரண்டு சமூக நல இல்லங்களுக்கு அன்பளிப்புகள்!

கோலாலம்பூர், டிச 1-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மலேசிய வணிகர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று தீபாவளி பொது உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய வணிகர்கள் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

பல முக்கிய பிரமுகர்களும் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர்களும் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வில் Pertubuhan Kebajikan Lindungan Ikhlas Kuala Lumpur மற்றும் Presentation of donation to Hiichiikok Foundation ஆகிய இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தீபாவளி அன்பளிப்புகளை அமைச்சர் சிவகுமார் எடுத்து வழங்கினார்.

சமூக சேவையிலும் ஈடுபட்டிருக்கும் மலேசிய வணிகர்கள் சம்மேளனத்தின் பணியை அமைச்சர் சிவகுமார் வெகுவாக பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles