மலேசிய வணிகர்களுக்கு வழிகாட்டும் சக்தியாக மலேசிய வணிகர்கள் சம்மேளனம் விளங்குகிறது! அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர், டிச 1-
Federation Malaysia Bussines Assocation எனப்படும் மலேசிய வணிகர்கள் சம்மேளனம் இந்நாட்டில் உள்ள
மலேசிய வணிகர்களுக்கு வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

வணிகர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சம்மேளனம் செயல்படுவது பாராட்டுக்குரியது.

வணிகர்களின் வணிக வாய்ப்புகளை ஒளிரச் செய்யவும் வலையமைப்பை உருவாக்கவும்
இந்த சம்மேளனம் ஊக்குவிக்கிறது என்று அவர் சொன்னார்.

FMBA, மூலம்
பல்வேறு வர்த்தக தொழில் சங்கங்களை ஒன்றிணைப்பதை இது பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Federation Malaysia Bussines Assocation ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கலந்து சிறப்பித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய வணிகர்கள் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் ஏற்பாட்டில் மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் இராகவன், மலேசிய இந்திய முஸ்லிம் உணவக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹவாகர் அலி, மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ கணேஷ், மனிதவள அமைச்சின் சோக்கோ அதிகாரி மகேசன், சொக்சோ நிறுவனத்தின் உயர் அதிகாரி அஜிருவான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles