2023 மிகவும் வெற்றிகரமான ஆண்டாகும்! 2024 ஆண்டிலும் HRD Corp சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், டிச 2-
மனித மூலதன வளர்ச்சிக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக, HRD Corp
மலேசியாவில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
.
HRD Corp இன் 30ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றிரவு கோலாலம்பூர் மைக்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் சிவகுமார் உரையாற்றினார்.

HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் சிவகுமார் கெளரவித்தார்.

HRD Corp இன் 30ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

HRD Corp இன் ஆரம்பகால பயணம் மற்றும்
அதன் நீண்ட கால நம்பகத்தன்மைகள் மிகவும் பாராட்டுக்குரியவை.

நாட்டின் திறமையான மனித மூலதனத்தை உருவாக்குவதில் HRD Corp சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்த தருணத்தில் 2023 ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக
HRD Corp நிறுவனத்திற்கு அமைந்துள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டிலும் இதன் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.

அற்புதமான இந்த ஆண்டு மத்தியில் HRD Corp நிறுவனத்தின்
வெற்றிகளில் ஆறு சிறந்தவை அடங்கும்.

மிகப்பெரிய அனைத்துலக
NHCCE 2023 எனப்படும் தேசிய மனித மூலதன மாநாடு & கண்காட்சியை நடத்தி உள்ளது.

இது தவிர்த்து HRD Corp பல விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.

இனிவரும் ஆண்டுகளிலும் எச்ஆர்டி கோர்ப் சாதனைகள் தொடர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles