மலேசிய – இந்திய இடையே தொழிலாளர் -தீவேட் முயற்சிகள் விரிவாக்கப்படும்!அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், டிச 2-
மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருக்கும்
இந்திய கல்வி விவகார அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தனது குழுவினருடன் நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதிக்கு பின் இந்த பொறுப்பை வகிக்கும் அவரது முதல் வருகை இதுவாகும்.

இந்திய கல்வி அமைச்சர் டாக்டர் ராஜ்குமாருடன் நடத்தப்பட்ட சந்திப்பு பெரும் பயனாக அமைந்தது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், தொழிலாளர் மற்றும் தொழிலாளர்கள், குறிப்பாக TVET முயற்சிகளில் விரிவாக்கப்படும் என்றார் அவர் .

வரும் ஜனவரி மாதம் இது தொடர்பில் மலேசிய – இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மலேசிய இந்தியா இடையிலான உறவு மிகவும் பாரம்பரியமிக்கது.

அந்த வகையில் இரு நாடுகள் இடையே இருவழி உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles