
கோலாலம்பூர் டிச 8-
அடையாளம் தெரியாத தரப்பினரால் சொக்சோ சமூக பாதுகாப்பு தரவு தளம் ஊடுருவுப்பட்ட சம்பவத்தில் மக்களுக்கான அதன் சேவையில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை என்று சொக்சோ இன்று வெளியிட்ட அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளது.
சொக்சோ சந்தாதாரர்கள், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கான வட்டி இழப்பீடு, மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முறையாக வழங்கப்படும்.
இணையதளம் ஊடுருவுபட்ட நாளிலிருந்து நெருக்கடி நிர்வகிப்பு திட்டமும் செயல் படுத்தப்பட்டுள்ளது.
அன்றாட நடவடிக்கைகளுக்குப் யன்படுத்தப்படும் அனைத்து சமூக பாதுகாப்பு அமைப்பின் உள்கட்டமைப்பை முடக்குவதே இந்த இணையதளத் தாக்குதலின் நோக்கமாகும்.
சமூக பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக இந்த இணையதள தாக்குதல் முதல் முறையல்ல.
இருப்பினும் சமூக பாதுகாப்பு அமைப்பின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் கட்டுப்பாட்டை மீண்டும் பெற முடிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

