

புக்கிட் ஜாலில், டிச 8-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா இன்று மிகவும் விமரிசையாக புக்கிட் ஜாலில் வளாகத்தில் தொடங்கியது.
மக்களுக்கு சேவை வழங்க பல முகப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்க கல்வி கழகங்களில் மாணவர் பதிவு வணிக வாய்ப்புகள், தொழில் முனைவோர் திட்டம், ரஹ்மா விற்பனை ஆகியவை இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் மற்றும் போக்குவரத்து சம்மன்களை செலுத்துவதற்கு முகப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு உட்பட ஒவ்வொரு அமைச்சின் முகப்பிடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாய்ப்புக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக வேலைவாய்ப்பு கண்காட்சியும் இங்கு இடம் பெற்றுள்ளது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று இந்த விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மனிதவள அமைச்சர் வ. கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

