


ஈப்போ, டிச 9-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் படங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என மனிதவள அமைச்சர்
வ. சிவக்குமார் இன்று கேட்டுக் கொண்டார்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நமது மாணவர்களின் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது.
இடைநிலை பள்ளிக்குச் செல்லும்போது இவ்விரு பாடங்களில் அவர்கள் பின்தங்கி விடுவார்கள்.
பட்டத்தாரி மாணவர்களை உருவாக்குவதற்கு இவ்வரு பாடங்களும் முக்கிய பங்காற்றுகின்றன.
ஆகவே தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக ஆர்வம் செலுத்த ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் தொழில் திறன் கல்விகளிலும் அறிவியல் மற்றும் கணிதப் படங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.
இதை கவனத்தில் கொண்டு
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய மாணவர்களும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்குவதை ஆசியர்களும் பெற்றோர்களும் உறுதி செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று ஈப்போ மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்த அமைச்சர் சிவக்குமார் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றிய போது இந்த கருத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

