
டிங்கி காய்ச்சல் அதிகம் பரவும் இடமாக அடையாளம் காணப்பட்ட ரவாங் பெர்டாணா பங்சாபூரி அடுக்குமாடி குடியிருப்புகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சூ தெரிவித்தார்.
டிங்கி பரவலில் இருந்து குடியிருப்பாளர்கள் விடுப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மக்களுடனான இந்த நடவடிக்கையில் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கலந்து கொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்புகளையும் அதன் சங்கங்களையும் முறையாக பராமரிக்க செலாயாங் நகராண்மைக் கழகம் சிறப்பு செயற்குழுவை உருவாக்க வேண்டும்.
அதோடு, அடுக்குமாடிகளை மேம்படுத்த குடியிருப்பாளர்களும் அவர்களின் பங்காக மாதத்திற்கு 45 வெள்ளியை செலுத்த வேண்டும்.
அடுக்குமாடிகளுக்கு சாயம் பூச வீடமைப்பு ஊராட்சி துறையிடம் நிதி கோரி வேலை செய்து வரும் நகராண்மை கழக உறுப்பினர் எலிஸ் சேவை, சுவா வெய் கியாட் பாராட்டினார்.
வீடமைப்பு ஊராட்சி துறையிடமிருந்து நிதியை பெற உதவி புரிந்த செலாயாங் நகராண்மை கழகத்தின் கட்டட மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனர் முகமட் அஷ்ராவ் மாட் யாஜிட்டிற்கு மனமார்ந்த நன்றியினை எலிஸ் சூ தெரிவித்துக் கொண்டார்.
அடுக்குமாடிகளுக்கு சாயம் பூசும் பணிகளுக்காக வீடமைப்பு ஊராட்சி துறை 4 லட்சத்து 38 ஆயிரத்து 500 வெள்ளியை வழங்கியுள்ளது. அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாயம் பூசும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு ஜனவரி 19ஆம் தேதி நிறைவடையும் என்பது குறிப்பிடதக்க்கது.

