
தாப்பா வட்டார சமூக ஆர்வலரும் அரசியல் பிரமுகருமான திரு.மு.சந்தனசாமியின் மகன் ச.ரவீன் குமார் அன்மையில் நடைபெற்ற வவாசான் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வணிக கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்று இளங்கலை பட்டம் பெற்றார்.
தாப்பா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் தொடர்ந்து தனித்துவமாக இயங்கி வரும் அதேவேளையில் பணியில் இருந்து கொண்டே கல்வி கற்க எதுவும் தடையில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தனது மேற்கல்வியை தனக்கு விருப்பமான துறையில் சாதித்தும் காட்டியுள்ளார்.
மேலும்,தொடர்ந்து தாம் கல்வியில் இளங்கலை பட்டம் பெறுவதற்காக ஆதரவும் ஊக்கம் அளித்து உற்சாகப்படுத்திய பெற்றோர்களுக்கும் உடன் பிறப்புகளுக்கும் நன்றி தெரிவித்த ரவீன் குமார் கல்வி அடுத்தக்கட்ட நகர்வாக இத்துறையில் தொடர்ந்து பயிலவும் இலக்கு கொண்டிருப்பதாக கூறினார்.

