வருகின்ற டிசம்பர் 24 நாளன்று காலை மணி 8.30 முதல் மாலை மணி 5.00 வரை கலும்பாங் மை ஸ்கில் மண்டபத்தில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கின்செயற்குழு சார்பாக பொதுமக்களும் இளைஞர்களும் திரளாக வந்து கலந்துகொள்ளமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.
இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனை தொடர்பான புரிந்துணர்வை உருவாக்கவும் ஊக்குவிக்கவும்இந்தக் கருத்தரங்கு முதன்மை நோக்கமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. மேலும் இளைஞர்களின்ஊடாகவே, பகுத்தறிவுச் சிந்தனையை இளைஞர்களிடம் விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள வேளைஇந்தக் கருத்தரங்கம் எல்லா இளைஞரின் வாழ்வினை மேம்படுத்த வித்திடும் இலக்கினையும் கொண்டுள்ளது.
மலேசியத் திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழர் தன்மானப்பேரியக்கம், பேரா மாநில பெரியார் பாசறை, பெரியார் நற்பணி மன்றம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம்ஆகிய பதிவுபெற்ற அரசு சாரா இயக்கங்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் இளைஞர்களின்முன்னெடுப்பில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கில் சொற்பொழிவாற்ற தமிழ்நாட்டுத் திராவிடர்கழகத்திலிருந்து மானமிகு தோழர் மதிவதனி அவர்களும் தமிழ்நாட்டுப் பெண்ணிய இயக்கத்திலிருந்துமானமிகு தோழர் திலகவதி அவர்களும் தமிழ்நாட்டு இயற்கை பாதுகாப்புக்கான அகத்தி இயக்கத்திலிருந்துமானமிகு தோழர் பாரதி கண்ணன் அவர்களும் இலங்கை பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத்திலிருந்துமானமிகு தோழர் கணேஷ் அவர்களும் அமெரிக்காவின் பன்னாட்டுப் பெரியாரியத்திலிருந்து அமரன்அவர்களும் கலந்துகொள்வார்கள்.
இவர்களின் சிறப்புமிகு சொற்பொழிவோடு வில்லுப் பாட்டு, பறையிசை என இன்னும் ஏராளமான சிறப்புஅங்கங்கள் மக்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேளை எல்லோரும்வருகை அளித்து பயன்பெறுமாறு ‘பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவுக் கருத்தரங்கின்’ ஏற்பாட்டுக்குழு அழைக்கின்றனர்.
மேல்விவரங்களுக்கு 016-591 0564 / 012 434 1474 எண்களைத் தொடர்புகொள்ளவும்.