
ராகா வானொலி ஒலியலையில் அறிவிப்பாளர் புன்னகை பூ கீதா தொகுத்து வழங்கும் மர்ம தேசம் நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர்ந்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஷோக் எனும் செயலி வாயிலாக மர்ம தேசம் நிகழ்ச்சி 11 மில்லியனுக்கு மேல் பதவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கீதா தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் அதிகமாக பதவிறக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சியாக மர்ம தேசம் அமைந்துள்ளது. மொத்தமாக 5.59 மில்லியன் முறை மர்ம தேசம் நிகழ்ச்சி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
தம்முடைய இந்நிகழ்ச்சி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மட்டுமின்றி shok broadcast-ட்டின் சிறப்பு விருதினையும் வென்றுள்ளது.

தமக்கும் தம்முடைய நிகழ்ச்சிக்கும் பேராதரவு வழங்கி வரும் பொதுமக்கள், ராகா, ஷோக் செயலி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் புன்னகை பூ கீதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மலாய், சீன மற்றும் ஆங்கில மொழிகளின் நிகழ்ச்சிகளுடன் போட்டி போட்டு மர்ம தேசம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

