டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் சமுதாயத்தின் உரிமைக் கட்சியாக திகழ்கிறது மஇகா.

நேற்று பெய்த மழையில் பூக்கும் களான்களைப்போல் நம்மிடையே அவ்வப்போது பல இந்தியக் கட்சிகள் தோன்றினாலும் இந்திய சமுதாயத்திற்கு தன்னிரகற்ற கட்சியாகத் திகழ்ந்துக் கொண்டிருப்பது மஇகாதான்.அதுவும் அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் அவரது சாதனைகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்று மீண்டும் மஇகா கிளைகள் முன்பைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம்.
ஒன்றா இரண்ட, அவரது சமீபத்தில் கட்சிக்காக எடுத்து நடத்திய சாதனைகளை சொல்வதற்கு இங்கு பட்டியல் போட்டால் நீண்டுக் கொண்டே போகும்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் பொதுத்தேர்தலின் போது தாப்பா நாடாளுமன்றைத் தவிர அனைத்து நாற்காலிகளையும் மஇகா இழந்தது.

மஇகா வரலாற்று சமராஜ்ஜியம் இதோடு முடிந்தது என பலரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கொக்கரித்துக் கொண்டிருந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மிகுந்த நெருக்கடியான அன்றையக் காலக்கட்டத்தின்தான் டான்ஶ்ரீ .விக்கேஸ்வரன் அவர்கள் மஇகா தலைமைப் பொறுப்பை துணிந்து ஏற்று சிறப்பாக வழி நடத்தி மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியா மஇகாவை திகழவைத்தார்.

பணத்திற்காக யாரிடமும் கையேந்தாமல் மானியத்தையும் பெறாமாலும் கட்சி நன்மதிப்பைப் பெற அதற்கு என வரையறையினை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
கல்வியானாலும் சரி அல்லது மற்ற மற்ற உதவிகளைக் கேட்டு அவரிடம் செல்பவர்களுக்கு இல்லை எனச் சொல்லாமல் கட்சியின் முலமாகவும் தனிப்பட்ட மூலமாகவும் இவர் உதவிகளை தொடர்ந்து உதவிகளை செய்வதில் இவருக்கு நிகர் இவர்தான்.

குறிப்பாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி,டேப் கல்லூரி மாணவகள் மற்றும் மற்ற மற்ற கல்லூரியில் நமது மாணவர்களுக்கு இவர் தயங்காமல் தனது உதவியினை செய்தும் வருகிறார்.
.
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தின் இயங்கும் நமது மஇகா கட்சி அரசாங்கத்தில் இடம் பெறாவிட்டாலும் மாநிலம் தொகுதிகள், கிளைகள் என வெகுச் சிறப்பாக செயல்படுவதற்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வகுத்த செயல்பாடுகள் குறித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பதவிகளை எதிர்ப்பாத்து யாரிடமும் பிச்சைக் கேட்கவும் இல்லை.திறம்பட கட்சியினை வழி நடத்தி இகா கிளைகளை இன்னும் சிறப்பாக இயங்குவதற்கு மறு ஆய்வு செய்து அடுத்த கட்டத்தை நோக்கி அதில் வெற்றியும் கண்டு உள்ளார்.

சுருங்கச் சொன்னால் மஇகா தலைவர்கள் கட்சியின் மீது முழுமையாக நம்பிக்கையினை இழந்து விட்ட நிலையில் இருந்தபோது பல அறியத் திட்டங்களை கட்சிக்கு கொண்டு வந்த சாதனத்தலைவர் இவர்.
இவது இன்னொரு சாதனையாக திகழ வைப்பது, கெடா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்து அடுத்த நிலையில்
தலைநகரில் மெடிக்கல் மருத்துவமனையும், மெடிக்கல் கல்லூரியையும் கூடிய விரைவில் அமைக்க உள்ளனர்.குறிப்பாக தலைநகரில் அருகாமையில் உள்ள மாணவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் எளிமை படுத்தவதற்காகத்தான்.

இது தூர சிந்தனையினை உதிர்ந்த பல திறம்பட திட்டங்கள் மஇகா எதிர் நோக்கி தனது செயல்பாட்டை முன் வைத்துள்ளது. நமது சமுதாயத்தினருக்கு மஇகா மீது இந்தக் குறுகிய காலக்கட்டத்திலே அசைக்க முடியாத நம்பிக்கையினை ஏற்படுத்தி மீண்டும் கட்சியினை வலுப்பெற வைத்தவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு இப்போதைய ஆயுத்தமாகிக் கொண்டிருக்கின்றது மஇகா என்பதே மகிழ்சியான செய்தி.
நாட்டின் பல கட்சிகள் வந்தாலும் இந்த நாட்டின் இந்திய சமுதாயத்தின் உரிமைக் கட்சியாக திகழ்வது மஇகா மட்டும்தான்.. ஆண்டவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க இறைவனை வணங்கிறேன்.

என்றும் அன்புடன்
செபூத்த எஸ் எஸ்.இராமமூர்த்தி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles