ரவாங் நியூ கிரின் பார்க் வெள்ள பிரச்சினைக்கு தீர்வு! 

மழைக் காலங்களில் நீர் தேக்கத்தால் ரவாங் நியூ கிரின்  பார்க் 1,2 வீடமைப்பு பகுதிகளில் வெள்ளப்பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளன

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் குடியிருப்பாளர்கள் செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ்சு விடம் புகார் தெரிவித்துள்ளனர்

அப்பகுதியை சுற்றியுள்ள கால்வாய்களை சரி செய்தால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என எலிஸ் சுநடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

முதல் கட்டமாக இந்த பிரச்சினை செலாயாங் நகராண்மைக் கழகத்தின் பார்வைக்கு கொண்டுச்செல்லப்பட்டதுஆனால் அக்கழகத்தில் பொதுமான நிதி இல்லாததால் எலிஸ் சு தனது சொந்த முயற்சியில்வீடமைப்பு ஊராட்சி துறையை நாடியுள்ளார்

கடந்த செப்டம்பர் மாத வாக்கில் வீடமைப்பு ஊராட்சி துறை மூன்று லட்சத்து 14 ஆயிரம் வெள்ளியைஒதுக்கீடு செய்துள்ளது

அதன் மூலம்நகராண்மைக் கழகத்தின் பொறியியல் துறையினருடன் உதவியோடு மூன்று மாதக் காலத்தில்வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கால்வாய்கள் சரி செய்யப்பட்டுள்ளன

கால்வாய்கள் சரி செய்யும் பணிகள் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்த நிலையில் எலிஸ் சு மற்றும் ரவாங்சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் ஆகியோர் அப்பகுதிகளை மேற்பார்வையிட்டனர்

இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்கிய நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சுவிற்கு சுவா வெய்கியாட் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்

மேலும் தாம் முன்னெடுத்த இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய வீடமைப்பு ஊராட்சிதுறைக்கும் செலாயாங் நகரான்மை கழகம் மற்றும் அதன் பொறியியல் துறைக்கும் எலிஸ் சு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அதே வேளையில்தங்களின் குடியிருப்பு பகுதியில் தீராத பிரச்சினையாக இருந்து வந்த வெள்ளப்பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கையை முன்னெடுத்த செலாயாங் நகரான்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சு அவருக்கு   குடியிருப்பாளர்கள்  நன்றி தெரிவித்துக் கொள்வதாக குடியிருப்பாளர் பீட்டர் தெரிவித்தார்

இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு வருடக் காலம் ஆகும் என நினைத்துக் கொண்டிருந்தோம்ஆனால்எலிஸ்சுவின் பெரும் முயற்சியால் சில மாதங்களில் எங்கள் பிரச்சினை தீர்ந்ததாக குடியிருப்பாளர் விஜி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles