
Tvet எனப்படும் தொழில் திறன் பயிற்சிகள் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரும் உதவியாக இருக்கும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் கூறினார்.
டிஜிட்டல் தொழில் மயத்திற்கு மாறி வரும் உலக சூழலுக்கு ஏற்ப இந்திய மாணவர்களும் தங்களின் தொழில்நுட்ப ரீதியிலான தொழில்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜோகூர் ஜெயா டீரி சங்கம், சுல்தான் இப்ராஹிம் பொலிடெக்னின் கல்லூரி மற்றும் உயர்வோம் ஆகிய அமைப்புடன் இணைந்து tvet expo மற்றும் ஜோகூர் மாநில சீருடை அமைப்பின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
பாசிர் கூடாங்கில் அமைந்துள்ள சுல்தான் இப்ராஹிம் பொலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் யுனேஸ்வரன் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதோடு, இந்திய மாணவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் இந்நிகழ்ச்சிக்காக 11 ஆயிரம் வெள்ளி நிதியையும் வழங்கினார்.

