பினாங்கில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாட பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன!

பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுவின் ஏற்பாட்டில் 28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் பாட பயிற்சி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது என அதன் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.

அதோடு, எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எடுக்கும் 52 இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

28 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 5,330 மாணவர்களுக்கு 55 ஆயிரம் ரிங்கிட் செலவில்
தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் செலவில் 600 பயிற்சி புத்தகங்களும் கொடுக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக மொத்தம் 65 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்படுள்ளது. இதன் மூலம் தமிழ் கல்வி பயிலும் 5,930 இந்திய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழ் மொழியை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதோடு தேர்வுக்கு அவர்களை தயார் படுத்தும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த பயிற்சி புத்தகங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புவதாக பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles