
நேற்று தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பூச்சோங் தாமான் வாவாசானில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியின் 7 வீடுகளின் குடியிருப்பாளர்களின் பாதுகப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
நிலசரிவு குறித்து மாலை 7.26 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் உடனே விரைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பத்தினால் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. நிலச்சரிவின் காரணத்தினால் பொதுமக்கள் யாவரும் பாதிக்கப்படவில்லை.
தீயணைப்பு அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருவதாக சிலாங்கூர் தீயணைப்புப்படை நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

