கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு200 குடும்பங்களுக்குஅன்பளிப்பு வழங்கினார்டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி

கோலாலம்பூர் டிச 17-
வரும் 25 ஆம் தேதி உலகில் வாழும் கிறித்துவ மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவில் வாழும் கிறித்துவ மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர் .

இந்நிலையில் தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தோட்ட – மூலதொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி இன்று தித்தி வங்சா தொகுதியில் வாழும் 200 கிறிஸ்துவ குடும்பங்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகினார்.

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இன மக்களின் பெருநாளை முன்னிட்டு டத்தோஸ்ரீ. ஜோகாரி அப்துல் கனி பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறார்.

தீபாவளியின் போது 850 இந்திய குடும்பங்களுக்கும் அவர் உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தித்தி வங்சா தாமான் மலூரியில் நடைபெற்ற விழாவில் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி நேரடியாக 200 கிறிஸ்துவ குடும்பங்களுக்கு அன்பளிப்புகளை நேரடியாக வழங்கினார்.

கம்போங் பண்டானில் மிகவும் பிரபலமான சமூக சேவகி டாக்டர் புளோரன்ஸ் ஏற்பாட்டில் இன்று அன்பளிப்பு வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.

தித்தி வங்சா நாடாளுமன்ற ம இகா தொகுதி தலைவர் ஆர்.டி. சுந்தரம், கோலாலம்பூர் சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை, ராஜா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles