எஸ்பிஎம் மாணவர்களுக்கான பிரத்தியேக கருத்தரங்கு!

கோலாலம்பூர், டிச.17-
இந்திய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக எஸ்பிஎம் தேர்வை எதிர்நோக்கும் இந்திய மாணவர்களுக்கு பிரத்தியேக கருத்தரங்கு நடத்தப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா மாஹாசா பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கை இஎஸ் கல்வி மையம் வழி நடத்தியது. இது குறித்து பேசிய ஆசிரியர் டத்தோ ஈஸ்வரன், ஐந்து முறையாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் மொத்தமாக 750 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். அவகையில் ஒவ்வொரு கருத்தரங்கிலும் தலா 150 மாணவர்கள் இடம் பெறுவர். இந்த கருத்தரங்குகள் அனைத்து மாஹசா பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நடைபெறும் என்றார்.

இந்த கருத்தரங்கில் மலாய் மொழி, வரலாறு கணித பாடங்கள் போதிக்கப்படுகின்றன. எஸ்பிஎம் தேர்வில் இந்த மூன்று பாடங்களும் அவசியமானவை. எனவே தான் இந்த பாடங்களை தேர்ந்தெடுத்தோம். மித்ராவின் ஆதரவில் இந்த கருத்தரங்குகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாறாக அவர்களுக்கு மூன்று வேளை உணவே பங்கேற்புக்கான சான்றிதழையும் வழங்குகின்றோம். அது மட்டுமின்றி 14 பாட அம்சங்கள் அடங்கிய எஸ்பிஎம் தேர்வுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழங்குகின்றோம். இந்தப் பாட புத்தகம் தரமிக்க முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 567 பக்கங்கள் உள்ளன. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவர். அதிலும் உட்புற பகுதியைச் சேர்ந்த பி40 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆகையால் இந்திய மாணவர்களின் கல்வி மீது அக்கறை கொண்டு இந்த வாய்ப்பை ஏற்படுத்திய மித்ராவுக்கு டத்தோ ஈஸ்வரன் நன்றியை கூறிக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles