பத்துமலை தமிழ்ப்பள்ளியில் சிறுவர் சிறப்பிக்கப்படுவர் என கருப்பொருளோடு சிறுவர் தின கொண்டாட்டம்

பத்துமலை தமிழ்ப்பள்ளியில்
கடந்த 15 டிசம்பர் வெள்ளிக்கிழமையன்று சிறுவர் தினக் கொண்டாட்டம் இனிதே நடைப்பெற்றது.

இவ்விழா மாணவர் நலத்துணைத்தலைமையாசிரியர் விக்டர் ஆசீர்வாதம் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் தினத்தை ஆறாம் ஆண்டு மாணவர்களான டனேஸ்வரன் முனீஸ்வரன் மற்றும் ரோஷ்ணி ரமேஷ் அறிவிப்பாளர்களாக வழிநடத்தினர்.

மாணவர் தலைவர் சச்ரிட் சங்கர் வாழ்த்துரையை வழங்கினார். இக்கொண்டாட்டத்தைப் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இதில், அனைத்து மாணவர்களுக்கும் என்ரிகோஸ் நிறுவனம் ‘ஹை டாப் டீ’ சார்பில் ‘மை காப்பி’ வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசாகப் பொம்மைகள் வழங்கப்பட்டது.

இவ்வேளையில் இச்சிறுவர் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற உதவிய பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் அறங்காவலர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா அவர்கள், பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி செங்கல்ராயன், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆசிரியர் விக்டர் கூறினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles