
பாங்கி, டிச 18-
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாங்கி ரூக்குன் தெத்தாங்கா தலைவர் மகேந்திரன் ஏற்பாட்டில் நேற்று 100 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
பாங்கி மற்றும் செமினி வட்டாரத்தைச் சேர்ந்த நூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உணவு கூடைகள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்.
முன்னாள் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் மூலமாக இந்த உணவு கூடைகள் கிடைக்கப்பெற்றது.
நேற்று பாங்கி ரூக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் நடைபெற்ற உணவு கூடைகளை வழங்கும் நிகழ்வுக்கு காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் தியாகராஜா தலைமை ஏற்றார்.
பாங்கி வட்டாரத்தின் மண்ணின் மைந்தர் செ.வே. முத்தமிழ் மன்னன் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்
தீபாவளி பண்டிகை முன்னிட்டும் பாங்கி வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

