
செந்துல் கம்போங் ரயில்வே ஶ்ரீ நாகம்மன் ஆலயத்தின் சிலைகள் உடைக்கப்பட்டப்
பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் நோக்கில் டத்தோ ஏ.கே. ராமலிங்கம் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்.
இதனை அறிந்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார்.
ஒய்.டி.எல். நிறுவனத்தின் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியதோடு இப்பிரச்சினைக்கு தீர்வு பெரும் நடவடிக்கையாக டிசம்பர் 26ஆம் தேதி அன்று ஒய்.டி.எல். நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாவும் டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை சந்திப்பிற்கு ஆலய நிர்வாதத்தினரோடு தாமும் கலந்து கொள்வேன் என்று சரவணன் கூறினார். மேலும் இச்சந்திப்புக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவருக்கும் அழைப்பு கொடுப்பதாகவும் டத்தோஸ்ரீ சரவணனும் குறிப்பிட்டார்.
ஆலயத்தில் பூஜைகள் தடையின்றி நடத்துவதற்கு ஒய்.டி.எல். நிறுவனம் அனுமதி வழங்கி இருப்பதாக அவர் சொன்னார்.
நமது ஆலயம் நமது சமயம் இவை அனைத்தும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதுகாக்க வேண்டும்.
ஆகவே, ஆலயம், சமயம் விவகாரங்களில் நாம் குறைகூறுவதை தவிர்த்துவிட்டு ஒற்றுமையுடன் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

