டானாவ் கோத்தா ஶ்ரீ திருமுருகன் ஆலய விவகாரத்தில் ஆர்.ஓ.எஸ். எடுக்கும் முடிவையே முழுமையாக ஏற்போம்:- கேவின் ரமேஷ்

டானாவ் கோத்தா ஶ்ரீ திருமுருகன் ஆலயத்தின் விவகாரத்தில் ஆர்.ஓ.எஸ். முடிவுக்கே தாம் அனைவரும் கட்டுப்பட இருக்கிறோம் என்று ஆலயத்தின் சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் கேவின் ரமேஷ் தெரிவித்தார்.

ஶ்ரீ திருமுருகன் ஆலயத்தின் முன்னால் முறையற்ற நிர்வாகத்தின் கண்டித்து நேற்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேவின் அவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் ஆலய நிர்வாகத்தின் அவசர
கூட்டம் நடக்க இருந்த வேளையில் ஆலயத்தை மூடி கூட்டத்தினை நடக்கவிடாமல் செய்த ஆலயத்தின் முன்னால் நிர்வாகத்தின் செயல் கண்டிக்கத்தகது.

இது குறித்து ஆலயத்தின் முன்னால் நிர்வாகம் மண்ணிப்பு கேட்க வேண்டும் என்று கேவின் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பாக ஆலய உறுப்பினர்களோடும் அவ்வட்டார பொதுமக்களோடும் இன்று அவசர கூட்டம் நடத்தப்பட்டது. ஆலய உறுப்பினர்களில் பெரும்பான்மையினரோடு இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டதாக கேவின் சொன்னார்.

நடைபெற்ற அவசர கூட்ட்த்தில் விவாதிக்கப்பட்ட ஆலயத்தின் தற்போதய நிலையினை முழுமை விவரித்தும் அடுத்தக்கட்டத்திற்கான கோரிக்கைகளையும் இன்று ஆர்.ஓ.எஸ்.-க்கு கடிதம் அனுப்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆலயத்தின் இந்த விவாகாரத்தில் நல்ல முடிவை ஆர்.ஓ.எஸ். தான் எடுக்க வேண்டும். ஆர்.ஓ.எஸ். எடுக்கும் அந்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட இருக்கிறோம் என்றார் கேவின்.

ஆலய முன்னால் நிர்வாகத்தின் மேல் ஆர்.ஓ.எஸ். 9 குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் ஆலயத்தின் பொருலாளர் பொருப்பு வகித்திருந்ததால் ஆலயத்தின் நகைகள் என்னிடம் இருக்கிறது. ஆகையால் அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

முறையான நிர்வாகம் இல்லாத காரணத்தினால் ஆலய நகைகளை நீதிமன்றத்தில் தாம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக கேவின் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles