
ஈப்போ, ஜன.10-
இன்று அதிகாலை ஈப்போ அருகே அயர் தவாரில் உள்ள பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டத்தோ ங்கே கூ ஹெம்-மின் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறுகையில், மஞ்சோங் காவல்துறைக்கு இன்று அதிகாலை 2.55 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து தகவல் பெறப்பட்டது.
இந்த சம்பவத்தால் வீட்டில் உள்ள வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
Mercedes Benz, Honda CR-V, Toyota Hilux ரக வாகனங்கள் தீயினால் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
டிஏபியின் செயலாளர் அந்தோணி லோக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இந்தச் சம்பவத்தை தீவிரமாகக் கவனிக்குமாறு உள்துறை அமைச்சு, மற்றும் மலேசிய காவல்துறையிடமும் கேட்டுக் கொண்டார்.

