
பிள்ளை பெற்ற தாய்மார்கள், கருவுற்றுள்ள தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகிய அனைவருக்கும் கம்போங் பாரு மம்பாங்கில் அமைந்துள்ள கிளினிக் டேசா சிறந்த முறையில் மருத்துவ சேவையை வழங்கிவகிறது.
மாத்ம்தோரும் இந்த கிளினிக் டேசாவில் சுமார் 60க்கும் மேற்பட்ட பிள்ளை பெற்ற தாய்மார்கள், கருவுற்றுள்ள தாய்மார்கள், 6 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆகிய அனைவரும் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சேவைகளை வழங்கிவரும் இந்த கிளினிக்கில் பிள்ளைகளுக்குப் பாலூட்டுவதற்கென பிரத்தியேக அறை இல்லாதது வருத்தமளிப்பதாக மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பவானி ஷாஷா தெரிவித்தார்.
இந்த கிளினிக் டேசா நான்கு அறைகளை உள்ளடிக்கியுள்ளது. அவை சிகிச்சைக்கு 2 அறைகளும் மீதம் உள்ள 2 அறைகளில் ஒன்று மருந்துகள் தயார் செய்வதற்கும், ஒன்று மருந்துகள் பத்திரப்படுத்தி வைப்பதற்கும் பயன்படுத்தப்படுத்தப் படுகிறது.
இதனால், பிள்ளைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். காரணம், பிள்ளைகளுக்கு பாலூட்ட பலர் தங்களது வாகனஙகளிலும் மேலும் சிலர் சிகிச்சை அறையிலும் பிள்ளைகளுக்குப் பாலூட்டி வருகின்றனர்.
இதனை கேட்டு அறிந்ததும் ஒரு பெண்ணாகவும் தாயாகவும் தமக்கு பெரும் வேதனையளிப்பதாக பவானி கூறினார்.
தாய்மார்கள் எதிர்நோக்குகின்ற இந்த பிரச்சினையை களைவதற்காக நடவடிக்கை எடுக்க போகிறேன். இது குறித்து பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான மாண்புமிகு சிவநேசன் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று பவாணி உறுதியளித்துள்ளார்.

