சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்தார் துணை அமைச்சர்!!

கோயமுத்தூர்,ஜன10:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவை சட்டத்துறை துணை அமைச்சர் மாண்புமிகு மு.குலசேகரன் தனது துணைவியாருடன் சந்தித்து ஆசிப்பெற்றார்.

இச்சந்திப்பு ஆத்மார்த்தமான சூழலில் ஆன்மீக சக்தியோடு அமைந்திருந்த வேளையில் சத்குருவுடன் ஆன்மீகம்,சமூகவியல் சார்ந்தும் பல்வேறு தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாகவும் மாண்புமிகு குலசேகரன் தெரிவித்தார்.

அதேவேளையில்,மலேசியச் சூழல் குறித்தும் கேட்டறிந்து கொண்ட சத்குருவிடம் துணை அமைச்சர் தனது சுயசரிதையான “Estate to Cabinet” என்னும் நூலையும் நினைவாக வழங்கினார்.

முன்னதாக ஆதியோகி சிலையையும் பார்வையிட்டு வணங்கிய துணை அமைச்சரும் அவரது துணைவியாரும் இச்சந்திப்பு தெய்வீக சிந்தனையோடு அமைந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும்,மனநிறைவும் ஆத்மார்த்தமான மகிழ்ச்சியான சிந்தனையும் இவ்விடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டனர்.

ஆதியோகி சிலை தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் அமைந்துள்ளது. இச்சிலை 112 அடி உயரம் கொண்டது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. இது 500 டன்கள் (490 நீண்ட டன்; 550 குறுகிய டன்) கொண்ட அடித்தளத்துடன் கட்டப்பட்டது. இச்சிலை யோகா மேம்பாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles