பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் மூர்க்கதனமான ஒன்று:- ஷாஷா கண்டனம்!!!

இன்று அதிகாலை பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் டிஏபி கட்சியின் ஆலோசகருமான டத்தோ ங்கே கூ ஹெம் அவரின் வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் கண்டிக்கத்தக்க செயலாகும்.

இத்தகைய கொடூரமான மூர்க்கத்தனமான செயலை தாம் வன்மையாக கண்டிக்கிறேன் என்று பேரா மாலிம் நவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஷாஷா தனது கண்டனத்தை தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை குறிவைத்து, மற்றும் பொது வசதிகள் அல்லது முக்கிய இடங்களில் நடத்தப்படும் இது போன்ற ஆபத்தான மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் இணக்கமான சமூகத்தில் தேசிய ஒற்றுமைக்கு கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கிவிடும். மேலும் சமூகத்தில் பதட்டமான சூழ்நிலைகளை உருவாக்குவதோடு மக்களுக்கு அசராங்கத்தின் மீது உள்ள நம்பிக்கைகளை சீர்குழைக்கச் செய்திடவும் வாய்ப்புகள் உள்ளது என்றும் ஷாஷா குறிப்பிட்டார்.

நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். அரசியல்வாதிகள் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் ஜனநாயக உரிமைகளை மீறுவது மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக வளரக்கூடும்.

இதுபோன்ற ஆபாத்தான தாக்குதல்களை முழுமையாக முறியடிக்கவும் அரசாங்கமும் சமூகமும் ஒன்றுபடவேண்டும். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிரமான விசாரனையை மேற்கொண்டு தேவையான தேவையான நடவடிக்கைகளயே முன்னெடுப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
இந்த வேளையில் டத்தோ ங்கே கூ ஹென் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமது ஆதரவு வழங்குவேன் என்றும் ஷாஷா கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles