
கிள்ளான், ஜன.11-
கெஅடிலான் மகளிர் உதவித் தலைவர் சங்கீதா ஜெயக்குமார் போர்ட் கிள்ளான் ஆணையத்தின் (பிகேஏ) வாரிய உறுப்பினராக உறுதி செய்யப்பட்டுள்ளார்.
தமது முகநூல் பதிவில் சங்கீதா ஜெயக்குமார், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
போர்ட் கிள்ளான் துறைமுக ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவது கடமை உணர்வுடன் நான் ஏற்றுக்கொள்கிற ஒரு பொறுப்பாகும்
இது மடானி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அர்ப்பணிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

